விக்டோரியாவின் கறுப்பு நாள்!

விக்டோரியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 725 பேருக்கு கொரோனா தொற்று இனங்காணப்பட்டுள்ளது. 15 பேர் மரணமடைந்துள்ளனர்.

இதையடுத்து நேற்று விக்டோரிய வரலாற்றில் பதிவான கறுப்பு நாள் என வர்ணிக்கப்படுகிறது.

மரணமடைந்தவர்களில் 12 பேர் முதியோர் இல்லங்களில் ஏற்பட்ட பரவலுடன் தொடர்புடையவர்கள் என குறிப்பிடப்படுகிறது.

அதேநேரம் உயிரிழந்தவர்களில் ஒருவர் 30 வயதிலுள்ள இளைஞர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனையவர்கள் 70 வயதுகளிலுள்ள பெண் மற்றும் 3 ஆண்கள், 80 வயதுகளிலுள்ள 3 பெண்கள் மற்றும் 3 ஆண்கள், 90 வயதுகளிலுள்ள 3 ஆண்கள் மற்றும் ஒரு பெண் ஆகியோரே இவ்வாறு மரணமடைந்ததாக Premier Daniel Andrews இன்று அறிவித்தார்.

இதையடுத்து விக்டோரியாவில் கொரோனாவினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 162 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது விக்டோரியா முழுவதும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவிலுள்ள 42 பேர் உட்பட 538 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here