மன்னார் வாக்களிப்பு நிலவரம்!

மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் இன்று புதன் கிழமை(5) காலை 7 மணிமுதல் வாக்களிப்புக்கள் ஆரம்பமாகி உள்ளது.

மன்னார் மாவட்டத்தில் இம்முறை வாக்களிக்க 88 ஆயிரத்து 842 வாக்களர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
அவர்களில் புத்தளத்தில் இடம் பெயர்ந்த 5 ஆயிரத்து 807 வாக்களர்களுக்கு புத்தளத்தில் வாக்களிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புத்தளத்தில் 12 விசேட வாக்களிப்பு நிலையங்களில் இடம் பெயர்ந்த மன்னார் மாவட்ட வாக்களர்கள் வாக்ளிக்க முடியும்.

மன்னார் மாவட்டத்தில் 76 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் நிலையங்கள் 15 அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் கடமைகளில் ஆயிரத்து 202 உத்தியோகத்தர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

காலை 7 மணி முதல் வாக்களிப்புக்கள் ஆரம்பமாகி உள்ளது.

காலையில் வாக்களிப்புக்கள் மந்த கதியில் இடம் பெற்ற போதும் தற்போது மக்கள் மற்றும் வேட்பாளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக மக்கள் வாக்களித்து வருகின்மையினை அவதானிக்கக்கூடியாதாக உள்ளது.

மன்னார் மாவட்டத்தில் 5 பிரதேசச் செயலாளர்கள் பிரிவுகளிலும் அமைக்கப்பட்ட 76 வாக்களிப்பு நிலையங்களிலும் வாக்களிப்புக்கள் இடம் பெற்று வருகின்றது.

முன்னார் மாவட்டத்தில் தேர்தல் கடமைக்காக 700 பொலிஸார் மற்றும் 40 அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தல் தற்போரு அமைதியான முறையில் இடம் பெற்று வருகின்றது.

வன்னி மாவட்டத்தில் 17 கட்சிகளும்,28 சுயேட்சைக்குழுக்களும் இவ்வாறு தேர்தலில் போட்டியிடுகின்றனர். வன்னி தேர்தல் மாவட்டத்தில் 6 உறுப்பினர்களை தெரிவு செய்ய வன்னி மாவட்டத்தில் தேர்தல் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here