வாக்களித்த அரசியல் தலைவர்கள்!

9வது நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வாக்களிப்புக்கள் இன்று விறுவிறுப்பாக இடம்பெற்று வருகிறது.

கொரோனா அச்சுறுத்தல் நிலவிய போதிலும், மக்கள் வாக்களிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இன்று வேட்பாளர்களும், அரசியல் பிரமுகர்களும் வாக்களித்து வருகிறார்கள். வாக்களித்த பிரமுகர்களின் படங்கள் கீழே.

பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ச இன்று வீரகெட்டிய, மெதமுதலன, டி.ஏ.ராஜபக்ச மகா வித்யாலயாவில் வாக்களித்தார்.

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வன்னி மாவட்ட வேட்பாளர் சிவசக்தி ஆனந்தன் வவுனியா தமிழ்மத்திய மகாவித்தியாலத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குசாவடியில் தனது வாக்கை அளித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர் ப.சத்தியலிங்கம் வைரவபுளியங்குளம் கிராம அபிவிருத்திசங்க மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்தார்.

தமிழ் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி, கிளிநொச்சி மகா வித்தியாலய வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்தார்.

யாழ்-கிளிநொச்சி தொகுதியில் போட்டியிடும் சுயேட்சைக்குழு 5 இன் வேட்பாளர் மு.சந்திரகுமார், கிளிநொச்சி திருநகர் வடக்கு பொது நோக்கு மண்டபத்தில் வாக்களித்தார்.

யாழ் மாவட்ட வேட்பாளர் த.சித்தார்த்தன் சுன்னாகம் ஸ்கந்தவரோதய கல்லூரியில் வாக்களித்தார்.

சுன்னாகம் ஸ்கந்தவரோதய கல்லூரியில் வாக்களித்த த.சித்தார்த்தன்

மன்னார் மாவட்ட வேட்பாளர் சாள்ஸ் நிர்மலநாதன், மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் வாக்களித்தார்.

யாழ் மாவட்ட வேட்பாளர் பா.கஜதீபன், இணுவில் மத்திய கல்லூரி வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்தார்.

மன்னார் விடத்தல் தீவு ஜோசப்வாஸ் பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர் செல்வம் அடைக்கலநாதன் வாக்களித்தார்.

யாழ் மாவட்ட வேட்பாளர் சி.சிறிதரன் கிளிநொச்சி வட்டக்கச்சி மாயவனூர் பாடசாலையில் வாக்களித்தார்.

தமிழ் மக்கள் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை சிதம்பர கல்லூரியில் வாக்களித்தார்.

சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் அங்கஜன் இராமநாதன் அளவெட்டி  சீனன்கலட்டி ஞானோதய வித்தியாலயத்தில் வாக்களித்தார்.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தம்பதியினர் மாவிட்டபுரம் அமெரிக்க மிசன் தமிழ்கலவன் பாடசாலையில் வாக்களித்தனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் ச.சுகிர்தன் ஆகியோர் இன்று குடத்தனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் வாக்களித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here