தேர்தல் சட்டமீறல்களில் ஈடுபடுபவர்களை படம்பிடிக்க வீடியோ கருவிகள்!

தேர்தல் சட்ட மீறல்களில் ஈடுபடுபவர்களை வீடியோ பதிவு செய்ய நடவடிக்கையெடுத்துள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.

இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், எஸ்.எஸ்.பி ருவன் குணசேகர, அனைத்து பொலிஸ் பிரிவுகளுக்கும் அதற்கேற்ப கமராக்கள் வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.

ஏதேனும் சட்டவிரோத நடவடிக்கை நடந்தால் இது நீதிமன்றத்தின் முன் வீடியோ ஆதாரமாக பயன்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

இதற்கிடையில், நாடு முழுவதுமுள்ள 12,984 வாக்களிப்பு நிலையங்களின் பாதகாப்பிற்காக ஒவ்வொரு வாக்களிப்பு நிலையங்களிலும் தலா 2 பொலிசார் வீதம், 25,998 பொலிசார் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

64 பிரதான வாக்கெண்ணும் மையங்களின் பாதுகாப்பிற்காக- ஒவ்வொரு மையத்திற்கும் 52 பொலிசார் வீதம், 3328 பொலிசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு வாக்கெண்ணும் மையத்திற்கும் வெளியே 45 எஸ்.டி.எஃப் வீரர்கள்  பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், நாடு முழுவதும் 121 வீதித் தடைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here