யாழ் நகரில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி!

யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் வேகமாக வந்த முச்சக்கரவண்டி மதிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியது.

யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதி மரியன்னை ஆலயத்திற்கு அருகாமையில் யாழ்நகர் நோக்கி வேகமாக வந்த முச்சக்கர வண்டி வேக கட்டுப்பாட்டையிழந்து மதிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியது.

விபத்தில் வயோதிபப் பெண்மணி ஒருவர் தலையில் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here