வவுனியாவில் குளவிக்கூட்டால் வாக்களிப்பு நிலையம் மாற்றம்!

நாளையதினம் இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக வவனியா மாவட்ட அரச அதிபரும், தெரிவித்தாட்சி அலுவலருமான சமன் பந்துலசேன தெரிவித்தார்.

மாவட்டச்செயலகத்தில் இன்றயதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

நாளையதினம் இடம்பெறவுள்ள வாக்களிப்பு நடவடிக்கைகளிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள 141 வாக்களிப்பு நிலையங்களில் 100 ற்கு மேற்பட்ட நிலையங்களிற்கான வாக்குப்பெட்டிகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் இதுவரை (காலை 10மணி) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்காக அரச உத்தியோகத்தர்கள் மற்றும், பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை ஈரற்பெரியகுளம் பரகும் மகாவித்தியாலத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையத்தில் குளவிக்கூடு அமைந்துள்ளமையால் பாதுகாப்பு கருதி, அந்த வாக்களிப்பு நிலையம் இரட்டை கலாசார மண்டபத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அது தொடர்பாக அந்த மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய வாக்களிப்பு நிலையங்களில் குளவிக்கூடுகள் இருக்கின்றனவா என்பது தொடர்பாக அதிகாரிகாளால் ஆராயப்பட்டு வருகின்றது.

அத்துடன் வன்னியின் முதலாவது தேர்தல் முடிவினை நாளை மறுநாள் மதியம் 12 மணி அளவில் வெளியிடுவதற்கு எதிர்பார்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here