வவுனியாவில் வாக்குப்பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டன!

இலங்கையின் 16 வது பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் நாளை இடம்பெறவுள்ள நிலையில் தேர்தலுக்கான வாக்கு பெட்டிகள் விநியோகிக்கும் பணிகள் நாடளாவிய ரீதியில் இன்று இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் இருந்து அனைத்து வாக்குச்சாவடிகளுக்குமான வாக்கு பெட்டிகள் எடுத்து செல்லும் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியாமாவட்டத்தில் 141வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டசெயலகத்தில் 31 வாக்கெண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், வன்னிதேர்தல் மாவட்டத்தில் 61 வாக்கெண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் 119,811பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். வன்னியில் 287024 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குபெட்டிகள் இன்றுகாலை 8 மணிமுதல் வவுனியா மாவட்ட செயலகத்தில் இருந்து பொலிஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டன.

இதேவேளை குறித்த பணிகளின் போது சுகாதாரநடைமுறைகள் பேணப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது

இதேவேளை தேர்தல் கண்காணிப்பாளர்களும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததுடன், வன்முறைகளை கண்காணிப்பதற்காக வன்னியில் 4200 ற்கும் மேற்பட்டபொலிசார் கடைமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், வவுனியாவில் 1500 ற்கும் மேற்பட்ட அரச ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here