சுப்பிரமணியபுரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்வாதி. கிராமத்து பெண்ணாக அவரது நடிப்பு பட்டிதொட்டியெங்கும் பேசப்பட்டது. குறிப்பாக காதல் காட்சிகளில் அவரது நடிப்பில் இளசுகள் சொக்கிப் போயிருந்தனர்.
இவ்வளவு திறமையிருந்தும், ஏனோ தமிழில் அதிக வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை. அதனால் மலையாளம், தெலுங்கு என கரையொதுங்கியிருந்தார். அங்கும் சரியான வாய்ப்புக்கள் அமையவில்லை.
இந்த நிலையில் தனது நீண்ட நாள் நண்பரான விகாஸ் என்பவரை திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளார். வரும் ஆகஸ்ட் 30 ல் திருமணம் நடக்க உள்ளது.
Loading...