கொரோனா தொற்றுக்குள்ளான பெண் பிரசவித்த குழந்தைக்கு தொற்று இல்லை!

கொரோனா தொற்றிற்குள்ளான கர்ப்பிணி பெண், பிரசவித்த குழந்தைக்கு கொரோனா தொற்று இல்லையென பரிசோதனைகளில் தெரிய வந்தது.

கொழும்பு கிழக்கு பொது வைத்தியசாலையில் நேற்று முன்தினம், கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் குழந்தை பிரசவித்திருந்தார். குழந்தை நேற்று பிசிஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதில், கொரோனா தொற்று ஏற்படவில்லையென்பது உறுதியானது.

35 மருத்துவ பணியாளர்கள் மேற்கொண்ட அறுவை சிகிச்சையின் பின், தொற்று நீக்கப்பட்ட அறையில் அந்த பெண் குழந்தை பிரசவித்திருந்தார். தாயார் குழந்தைக்கு தாய்ப்பால் பருக்கியதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.

ஜூலை 10 ஆம் திகதி வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்த இந்த கர்ப்பிணிப் பெண் கந்தக்காடு மையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் வைக்கப்பட்டிருந்தார். ஜூலை 21 ஆம் திகதி நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் சனிக்கிழமையன்று நடத்தப்பட்ட பி.சி.ஆர் சோதனையில் அவருக்கு தொற்று இல்லையென கண்டறியப்பட்டது. நாளை – 4 ஆம் திகதி மீண்டும் அவரும் குழந்தையும் மீண்டும் பி.சி.ஆர் சோதனைக்குட்படுத்தப்படவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here