கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் கேடயச் சின்னத்தின் மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்

கேடயச் சின்னத்தில் சுயேச்சைக் குழு 5 இல் போட்டியிடுகின்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் தலைமையிலான அணியினரின் மாபெரும தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று (02) கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

கட்சியின் மத்திய குழு உறுப்பினர் சு. மனோகரன் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் கிளிநொச்சி நகரின் பல பாகங்களிலிருந்தும் ஆயிரக் கணக்கான திரண்டிருந்தனர்.

இங்கு உரையாற்றிய முன்னளாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார்,

பலமிக்க தேசிய இனமாக தமிழ்ச் சமூகத்தை உருவாக்குவோம் தமிழ் மக்கள் என்றுமில்லாத அளவுக்கு மிக மோசமான நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ளனர், பலவீனப்படுத்தப்பட்டுள்ளனர். ஒரு இனத்தின் இருப்பை தீர்மானிக்கின்ற கல்வி , பொருளாதாரம், பண்பாடு, நிலம், என எல்லாமே இன்று சீர்குலைக்கப்பட்டுள்ளது. எனவே நாம் பலவீனப்பட்டுள்ள தமிழ் சமூகத்தை பலப்படுத்த வேண்டிய அனைத்து விடயங்களையும் மேற்கொள்வோம்

கடந்த ஐந்து வருடங்களில் தமிழ் சமூகத்தின் இருப்பு கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது. இளம் சமூகம் கைவிடப்பட்டுள்ளனர். அதன் விளைவே அவர்கள் திசை மாறிச் செல்வதற்கு வழிவகுத்துள்ளது. எனது அடுத்து வருகின்ற ஐந்து வருடங்களில் இளம் சமூகத்தின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து செயற்படுவேன்.

இன்று என் மீது நம்பிக்கை கொண்டே என் பின்னால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அணிதிரண்டுள்ளனர். எனவே அவர்களின் எதிர்காலம் பலப்படுத்தப்பட வேண்டும். அதுவே இனத்தின் எதிர்காலத்தையும் பலப்படுத்தும் எனத் தெரிவித்த அவர்

2010 க்கு பின்னர் தொடர்ச்சியாக தமிழ் மக்களை ஏமாற்றி வந்த தரப்புக்கள் இன்றும் அன்று சொன்ன அதே பழைய பல்லவியை சொல்லியப்படி வாக்கு கேட்டு வருகின்றனர். இவர்களிடம் தமிம் எதிர்காலம் தொடர்பில் எந்தவொரு திட்டமும் இல்லை, எதனையும் செய்யப் போகின்றவர்களும் இல்லை. எனவே மக்கள் இவர்கள் தொடர்பில் விழிப்பாக இருக்க வேண்டும்.

கடந்த 2010 தொடக்கம் 2015 வரையான காலத்தையும், 2015 தொடக்கம் 2020 வரையான காலத்தையும் ஒப்பிட்டு சிந்தித்து நிதானமாக வாக்களிக்க வேண்டும். இன்று எங்கள் பின் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்த கல்வியலாளர்கள், வைத்தியர்கள், வர்த்தகர்கள் சிவில் சமூக பிரதிநிதிகள் என அனைவரும் அணிதிரண்டுள்ளனர். கடந்த ஐந்து வருட காலத்தில் ஏற்பட்ட ஏமாற்றம். அதிருப்தி என்பனவே இன்று மக்கள் உள்ளிட்ட அனைவரையும் எங்கள் பின் அணிதிரள வைத்துள்ளது. எனவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here