வவுனியாவில் கட்சி அலுவலகம் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்

வவுனியாவில் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தின் மீது 12.20 மணியளவில் பெற்றோல் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இம்முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பிரபாகணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் காங்கிரஸ் அலுவலகத்தின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அலுவலகத்தில் முன்புற வீதியால் வந்தவர்களே தாக்குதல் நடத்தியதாக அங்கிருந்தவர்கள் கூறுவதுடன் மூவர் தாக்குதலை நடத்திவிட்டு ஓடுவதை அயலவர்கள் அவதானித்து தமக்கு கூறியதாகவும் தெரிவித்தனர்.

எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படாத போதிலும் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here