செப்ரெம்பரில் ஓய்வுபெறவுள்ள மஹிந்த தேசப்பிரிய!

தேசிய தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசபிரிய, தனது பதவிக் காலம் முடிவடைவதற்கு சில வாரங்களுக்கு முன்னதாக- செப்டம்பர் மாதம்- பதவி விலகுவார் என தெரிவித்துள்ளார்.

தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் பதவிக்காலம் நவம்பரில் முடிவடைகிறது. எனினும், தனிப்பட்ட காரணங்களுக்காக செப்டம்பர் முதல் முதலே, தேர்தல்கள் ஆணைக்குழு பணியிலிருந்த ஒதுங்கி, நேரமெடுத்துக் கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

“நாங்கள் (தேசிய தேர்தல் ஆணைக்குழு) 2020 நவம்பர் 13 ஆம் திகதி வீட்டிற்குச் செல்ல வேண்டும். அதற்கு முன்னர் சில தனிப்பட்ட வேலைகளுக்கு விடுப்பு எடுப்பேன் என்று நம்புகிறேன். எனவே செப்டம்பர் 15 முதல் நான் நேரம் எடுக்க வேண்டியிருக்கலாம்” என்றார்.

“கடந்த 37 ஆண்டுகளாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளேன். அது போதுமானது“ என்று கூறினார்.

ஓகஸ்ட் 5 நாடாளுமன்றத் தேர்தல், தேசிய தேர்தல் ஆணைக்குழுன் தலைவராக தேவபிரியவின் கடைசி தேர்தலாக இருக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here