கூல் கூழாம்பாணி வேலை செய்வார்: அங்கஜன் எச்சரிக்கை!

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆதரவினால் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக இணைந்துகொண்ட ரட்ன ஜீவன் கூல் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு காக தேர்தலே குழப்பி விடுவார் என சிறிலங்கா தந்திர கட்சியின் முதன்மை வேட்பாளரான அங்கஜன் ராமநாதன் அச்சம் வெளியிட்டுள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கே அவர் இவ்வாறு பதிலளித்தார் .

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற வேட்பாளர் ஒருவரின் பத்திரிகை என்மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவித்து வரும் நிலையில் அதற்கு சார்பாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக கடமையாற்றும் உறுப்பினர் ஒருவரும் உடந்தையாக உள்ளார்.

என்மீது சுமத்தப்பட்டுள்ள தேர்தல் விதிமுறை குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக மாவட்ட செயலகத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் சுயாதீன விசாரணை இடம்பெற்றது .

விசாரணைகள் முடிவடைந்த நிலையிலும் விசாரணை தொடர்பில் ஏன் இதுவரை அறிக்கை வெளியிடப்படவில்லை?

என் மீது குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டால் விசாரணை அறிக்கையை உடனடியாக வெளியிடுங்கள் பார்க்கலாம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் செல்வாக்கு சரிந்து உள்ள நிலையில் எமக்கான மக்கள் செல்வாக்கு அதிகரித்துள்ள நிலையில் அதனை பொறுக்காத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் அவர்களின் அடிவருடிகள் மூலம் எம் மீது சேறுபூசும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆகவே இம்முறை பாராளுமன்ற தேர்தலில் தமிழ்மக்கள் மாற்றத்திற்காக வாக்களிக்க முன் வந்துள்ள நிலையில் என்னை அரசியல்வாதியாக வெற்றியடைய செய்யாமல் மாற்றத்திற்கான மக்களில் ஒருவனாக வெற்றியடைய வையுங்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here