தாயாரின் பிரிவை தாங்க முடியாமல் மகன் எடுத்த விபரீத முடிவு!

தாயின் இறுதிச் சடங்கின் பின்னர் காணாமல் போன மகன் பத்து நாட்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவில், வடிச்சல் வீதி, கித்துள் பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான இளைஞனே உயிரிழந்துள்ளார்.

கடந்த 19ஆம் திகதி மாரடைப்பு காரணமாக இளைஞனின் தாயார் மாரடைப்பினால் உயிரிழந்திருந்தார்.

கடந்த 21ஆம் திகதி அவரது இறுதிச்சடங்கு இடம்பெற்றது. இதன்போது, “நீ முந்திப்போ அம்மா! நானும் உன்னோடு மூன்று நாட்ளுக்குள் வந்து சேருவேன் ”
என்று கூக்குரலிட்டு அழுத இவர் அன்றிலிருந்தே காணாமல் போயுள்ளார்.

தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிலிருந்து வெளியேறிச் சென்ற இவர் காணாமல் போனார்.

இந்த நிலையில், நேற்று (31) மாலை 04.00 மணியளவில் மரப்பாலம் காட்டுப்பகுதியால் மண் அகழ்வுக்காக சென்ற இவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் இவரது மோட்டார் சைக்கிள் காட்டுக்குள் இருப்பதை அவதானித்துள்ளார். இது தொடர்பில் காணாமல் போனவரின் சகோதரனிடம் விடயத்தை தெரிவிக்க,
சம்பவ இடத்துக்கு சகோதரன் உடனடியாக சென்றார்.

காட்டு மரமொன்றில் நைலோன் கயிரொன்றினால் கழுத்தில் சுருக்கிட்டு, தொங்கி மரணித்திருப்பதோடு, தலைப்பகுதி மாத்திரம் மரத்தில் தொங்கிய நிலையிலும், ஏனைய உடற்பகுதி தரையில் விழுந்து பழுதடைந்த நிலையிலும் சடலம் காணப்பட்டது.

கரடியனாறு பொலிஸ் நிலைய பதில் பொறூப்பதிகாரி MI. அப்துல் வஹாப்(IP), சோமதாஸ (PS) மற்றும் தடயவியல் பொலிசாரோடு சம்பவ இடத்துக்கு சென்ற மரண விசாரனைதிகாரி , சடலத்தை பார்வையிட்டு, விசாரனைகளை மேற்கொண்டு நள்ளிரவு 12.00 மணியளவில், பிரேத பரிசோதனைக்காக சடலத்தை, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்க பொலிசாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.
இன்று (01/08) பிரேத பரிசோதனை நடாத்தப்பட்டு சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here