வன்னியில் பெரமுனவிற்கு பின்னால் திரியும் தமிழ் இளைஞர்களிடம் வேண்டுகோள்!

இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர் வன்னியில் போட்டியிடுகின்றார். அதற்குப் பின்னாலும் தமிழ் இளைஞர்கள் ஒரு இனப் படுகொலைகளுக்குப் பின்னால் ஒரு இனப்படுகொலை அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு பின்னால் எம்மவர்கள் போவது மிகுந்த வேதனைக்குரிய விடையமாக காணப்படுகிறது என தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்தார்.

மன்னாரில் இன்று (1) சனிக்கிழமை காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர் வரும் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஏறக்குறைய நாளைய தினத்துடன் தேர்தல் பரப்புரைகள் எல்லாம் முடிவுக்கு வருகின்ற இந்த சூழ்நிலையில் என்றுமில்லாதவாறு வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும் அதிகளவான வேட்பாளர்கள் களம் இறங்கி இருக்கின்ற இந்த சூழ்நிலையிலும் வாக்காளர்களுக்கு யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்கின்ற முடிவுறுத்தக் கூடிய மனோநிலையில் இன்னும் அவர்கள் வந்து விடவில்லை.

அந்த அளவுக்கு இந்த அரசியல் சூழலை மிக மோசமாக குழப்பி ஆதாயம் தேடும் வகையிலே தங்களுக்குரிய இலாப நோக்குகளை முன் நிறுத்துகின்ற ஒரு போக்காகவே இந்த தேர்தலை காணக்கூடியதாக இருக்கிறது.

தென்னிலங்கையிலிருந்து களம் இறக்கப்பட்டவர்களும், தென்னிலங்கை கட்சினளின் அனுசரணையாளர்களும் வடக்கு கிழக்கிலே பல சுயேட்சைக் குழுக்களாகவும் பல கட்சிகளிலும் களமிறங்கியிருக்கிறார்கள்.

குறிப்பாக வன்னியிலே தெற்கில் இருந்து வருகை தந்துள்ள வேட்பாளர்கள், பொது ஜன பெரமுன கட்சியில் பிரதானமாக போட்டியிடுகிறார்கள்.

அவர்கள் தூள் வியாபாரிகளாகவும் கஞ்சா வியாபாரிகளாகவும், இருக்கின்ற சூழ் நிலை காணப்படுகிறது. அதனால் கோடிக்கணக்கான பணத்தைக் கொண்டு வந்து கொட்டி எமது இளைஞர்களை ஆசை வார்த்தை காட்டி ஏமாற்றி வாக்கு பெற்றுக்கொள்ளுகின்ற ஒரு அயோக்கியத்தனமான காரியத்தில் அவர்கள் ஈடுபடுகின்றார்கள்.

வண்மையாக கண்டிக்கப்பட வேண்டிய விடயம். ஏனெனில் இவர்களுக்கும் வன்னிக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? இந்தப் பிரதேசத்தில் தேர்தலில் போட்டியிட வேண்டிய அவசியம் இவர்களுக்கு ஏன் ஏற்பட்டிருக்கிறது என்ற கேள்வி இங்கு பிரதானமாக எழுகின்றது.

இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற வரும் பொதுஜன பெரமுனவின் வன்னியில் போட்டியிடுகின்றார். இவருக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று தெரியவில்லை.

அதற்குப் பின்னாலும் தமிழ் இளைஞர்கள் ஒரு இனப் படுகொலைகளுக்குப் பின்னால் ஒரு இனப்படுகொலை அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு பின்னால் எம்மவர்கள் போவது மிகுந்த வேதனைக்குரிய விடையமாக காணப்படுகிறது.

தயவு செய்து மக்கள் இவ்வாறானவர்களுக்கு வாக்களிக்க கூடாது. தென்னிலங்கை கட்சிகளுக்கும் வாக்களிக்கக் கூடாது. இனவாதக் கோட்பாட்டோடு வந்து இன வழிப்புக்கு உள்ளாக்கப் பட்டவர்களும் நிராகரிக்க வேண்டும் என நான் கேட்டுக் கொள்வதோடு இவ்வாறான சூழலில் ஏற்படுத்தியவர்களும் நம்மவர்களே.

நம்மவர்கள் ஒருங்கிணைந்து ஒன்றாக இந்த தேர்தலை முன்னிறுத்தி இருந்தால் அல்லது கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழ்த்தேசிய நீக்கத்தை ஈடுபடாமல் எமது மக்களை சரியான முறையில் வழிகாட்டி இருந்தால் இவ்வாறான ஒரு சூழ்நிலையில் நிகழ்ந்து இருக்க வாய்ப்பும் இல்லை.

மாறாக மாற்று அணி பேசியவர்கள் அல்லது மாற்று அரசியல் சித்தாந்தத்திற்கு சென்றவர்கள் கூட தங்களுக்குள் ஒரு ஒருங்கிணைவும் இல்லை.

ஒன்றாகச் சேர்ந்து தேர்தலில் போட்டியிட முனயவும் இல்லை.இந்த தேர்தல் களத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகியவர்கள் அல்லது வெறுப்படைந்தவர்கள் அல்லது ஏனைய பிரச்சினைகளினால் வெளியேறக் கூடியவர்கள் அல்லது தமிழரசுக் கட்சிக்கு வாக்களிக்க முடியாத சிந்தனையில் உள்ளவர்களை ஒருங்கிணைத்து ஒன்றாக கொண்டு போயிருக்க வேண்டிய ஒரு தேவை இருந்தது.

அதையும் அவர்கள் சரியாக கையாளவில்லை.மாறாக யாழ்ப்பாணத்தில் பெரும்பான்மை கட்சிகளுக்கும் சரி வன்னியில் பெரும்பான்மை கட்சிகளும் தமிழர்கள் அணியணியாக செல்லக்கூடிய ஒரு நிலை இருக்கிறது.

இந்த நிலைமைகளை எல்லாம் சரியாக கையாளத் தவறியதன் விளைவே இன்று மோசமான ஒரு பின்னடைவாக இருக்கிறது.

வருகின்ற இந்த தேர்தலிலேயே நீங்கள் ஒரு கொள்கை ரீதியாக வாக்களியுங்கள்.
கடந்த நான்கரை ஆண்டுகளில் அல்லது கடந்த பத்து ஆண்டுகளிலேயே தமிழ் தேசிய அரசியல் நிகழ்ச்சி நிரலில் எவ்வாறு தமிழ்த்தேசிய நீக்கத்தில் ஈடுபட்டவர்களை நிராகரியுங்கள்.

கொள்கையோடும், கோட்பாட்டோடும், உறுதியோடும், பற்றோடும் நிதானமாகவும் இன அழிப்பு போன்ற விடயங்களை முன்னிறுத்த கூடியவர்களுக்கு வாக்களியுங்கள்.

அவ்வாறானவர்களுக்கு வாக்களிப்பதன் ஊடாக தான் தமிழ் மக்களினுடைய எதிர்கால அரசியல் கருத்தியல் நோக்கில் கோட்பாட்டை ஒரு தளத்துக்கு கொண்டு போகக்கூடிய நிலைப்பாடு எங்களுக்கு அவசியம்.

வருகின்ற 5 ஆண்டுகளிலேயே பகுதீக ரீதியாக கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை திட்டமிட்டு அரசு மேற்கொள்ள உள்ள சூழ் நிலையில் அதனை தடுக்கக்கூடிய வகையில் ஒரு நிலை மாறான ஒரு உறுதியான கொள்கை தளத்தில் உள்ளவர்களை பாராளுமன்றம் அனுப்புங்கள்.

வெறுமனே காசுக்காக அல்லது சாராய போத்தல்கள் அல்லது சலுகைகளுக்காக அல்லது வேலை வாய்ப்புக்காக தயவு செய்து நீங்கள் வாக்களிக்காது சீர்தூக்கிப் பாருங்கள் யார் நல்லவர் யார் கெட்டவர் கடந்த காலத்தில் என்ன செய்தார்கள் எதிர் காலத்தில் எவ்வாறு செயற்படுவார் என்ற கேள்விகளையெல்லாம் கேட்டு அல்லது உங்களுக்குள் நிதானித்துக் கொண்டு மிகவும் ஆரோக்கியமான ஒரு அரசியல் எதிர்காலத்தை கட்டமைக்க கூடிய ஒரு சூழ் நிலைகளுக்காக வாக்களியுங்கள். இல்லாவிட்டால் இந்த தமிழ் இனத்தினுடைய இருப்பு கேள்விக்குள்ளாக்கப்படும்.

தயவு செய்து அரச முகவர்களுக்கும் அரசு ஒட்டுக்குழுக்களுக்கும் தமிழ் கட்சி ஒட்டுக் குழுக்களுக்கும் பொதுஜன பெரமுனவின் போட்டியிடுகின்ற ஏனைய மோசமான நிலையை கருத்திலில் கொண்டு இருக்கும் வேட்பாளர்களுக்கும், குறித்த கட்சியில் தமிழர்கள் போட்டியிடுகின்றார்கள் என்பதற்காகவும் நீங்கள் ஆதரிக்கக் கூடாது எனக் கேட்டுக் கொள்வதோ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here