போராளிகளை விட இராணுவத்திற்கே அதிகம் தெரியும்: ஜனநாயக போராளிகள்!


தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சாதாரண போராளிகள் பிழை விட்டதில்லை. ஆனால் தளபதிகள்தான் பிழைகள் விட்டார்கள் என பகீர் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர் ஜனநாயக போராளிகள்.

ஜனநாயக போராளிகள் அமைப்பின்சி.வேந்தன் இன்று யாழில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் இராணுவப் புலனாய்வு பிரிவினர் என பலரும் சொல்கிறார்கள், ஆனால் நாங்கள் நம்பவில்லையென்றுதான் சம்பந்தன் சொன்னார்.

நாங்கள் இராணுவ புலனாய்வாளர்களாக செயற்பட வேண்டிய தேவையில்லை. கைது செய்யப்பட்ட 14,000 பேரையும் இராணுவம் விசாரித்தார்கள். கைதானவர்கள் வழங்காத செய்திகளையா நாங்கள் வழங்கப் போகிறோம்.

புலிகளை பற்றி நாங்கள் என்ன புதிதாக சொல்லப் போகிறோம்? புலிகளை பற்றி எங்களிற்கு தெரியாத விடயங்கள்- அதிக விடயங்கள்- இராணுவத்திற்கு தெரியும். நாங்கள் புதிதாக என்ன செய்தி வழங்குவது?

விடுதலைப் புலிகள் அமைப்பில் சாதாரண போராளிகள் பிழை விட்டதை விட, அதிக பிழைகளை தளபதிகளே விட்டனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here