71 வயது தயாிப்பாளருடன் காதலியின் தகாத உறவு: சுஷாந்த் தற்கொலைக்கு காரணம்?

கடந்த ஒரு மாத காலமாக கொரானா வைரஸை தாண்டி இந்தியாவில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய சம்பவம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் தற்கொலை.

34 வயதே ஆன சுஷாந்த் கடந்த ஜூன் 14ல் அவரது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணம் மன அழுத்தத்தால் சில காலமாக இருந்துள்ளார் என்று கூறி வருகிறார்கள்.

தற்கொலையா? கொலையா என்று மும்பை போலிசார் பலரின் வாக்குமூலம் கொடுத்ததன் பேரில் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுவரையில் அதற்கு காரணம் வாரிசு நடிகர் நடிகைகளின் ஆதிக்கம் தான் காரணம் என்றும் சில பிரபலங்களின் பெயரை வைத்து செய்தி வெளியாகி வருகிறார்.

தற்கொலை சம்பந்தமாக சுஷாந்தின் தந்தை கே.கே. சிங் ரியா சகரபர்த்தி என்பவர் மீது புகார் அளித்துள்ளார். தற்கொலைக்கு தூண்டுதல், தவறான வழிநடத்துதல் கட்டுப்பாடு, பண மோசடி, நம்பிக்கை மீறிய செயல் என பல பிரிவின் கீழ் ரியா சகரபர்த்தி மீது வழக்கு கொடுத்துள்ளார்.

நடிகர் சுஷாந்த் சிங் அப்பெண்ணை காதலித்து வந்துள்ளார். காதலித்து கொண்டே பிரபல தயாரிப்பாளர் 71 வயதான மகேஷ் பட்டுடன் தொடர்பிலும் இருந்து வருகிறார். சுஷாந்த் உயிருடன் இருந்தபோதே 15 கோடி பணத்தை அவரது கணக்கில் மாற்றியும், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தியுள்ளார் ரியா.

சுஷாந்த் சிங்கின் தந்தையின் முறைப்பாட்டில்- சுசாந்த் சிங்குக்குச் சொந்தமான ரூ. 1.5 கோடி அவருக்குத் தொடர்பில்லாத வேறொரு வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளது. சுசாந்திடமிருந்த லேப்டாப், பணம், நகைகள், கிரெடிட் கார்டுகள் போன்றவற்றை ரியாவும் அவருடைய குடும்பத்தினரும் திருடி விட்டார்கள். மேலும் சுசாந்தின் மருத்துவ அறிக்கைகளை வெளியில் சொல்வதாக மிரட்டியுள்ளார்கள் என்று தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து பாட்னா காவல்துறை பதிந்துள்ள வழக்கை மும்பைக்கு மாற்றக்கோரி உச்ச நீதிமன்றத்தில் நடிகை ரியா மனு செய்துள்ளார்.

சுசாந்த் சிங் தந்தை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தங்கள் தரப்புப் பதிலைக் கேட்காமல் உத்தரவு எதுவும் பிறப்பிக்கக் கூடாது எனக் கோரி கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் ரியா குறிப்பிட்டுள்ளதாவது: 2012 முதல் நான் நடித்து வருகிறேன். சுசாந்தின் தந்தை தவறான முறையில் இந்த வழக்கில் என்னை தொடர்புபடுத்தியுள்ளார். சுசாந்த் சிங்குடன் கடந்த ஒரு வருடமாக லிவ் இன் உறவில் இருந்தேன். ஜூன் 8 அன்று முதல் மும்பையில் உள்ள என் வீட்டில் தற்காலிகமாக வசித்து வருகிறேன். அவருடைய மறைவால் பேரதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளேன். எனக்கு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல்கள் வருகின்றன. சுசாந்த் மரணத்தில் அவருடைய தந்தை புகார் அளித்தது போல சிறிதளவு உண்மை இருந்தாலும் பாந்த்ரா காவல் நிலையத்தில் தான் இந்த வழக்கு விசாரிக்கப்படவேண்டும். பிகாரில் நடுநிலைமையான விசாரணை நடைபெறாது. எனவே இந்த வழக்கை மும்பைக்கு மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here