மாடறுக்கும் மடுவம் ஆராய்வு!


கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் பராமரிப்பிலுள்ள மாடறுக்கும் மாடுவத்தின் நிலைமை தொடர்பில் ஆராயும் நோக்கில் தவிசாளர் யூ.எல்.அஹமட் தலைமையிலான குழுவினர் நேரடி விஜயம் செய்து அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் இன்று ஆராய்ந்தனர்.

ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு உழ்கிய்யாவுக்கு அதிகளவான மாடுகள் அறுக்கப்படுவதனைக் கருத்திற் கொண்டும் பெருநாள் அல்லாத காலங்களிலும் மடுவத்தின் சுகாதார நடைமுறைகள் தொடர்ந்து பேணப்பட வேண்டுமெனும் நோக்கிலும் இவ்விஜயத்தில் ஆராயப்பட்டது.

பொது மக்கள் உணவுத் தேவைக்காக இறைச்சியினைக் கொள்வனவு செய்கின்ற போது நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து, உரிய முறையில் அறுக்கப்பட்ட சுத்தமானவைகள் மக்களைச் சென்றடைவதுடன், மக்களை நோய்களிலிருந்து பாதுகாப்பதும், மடுவத்தில் நிலவும் குறைபாடுகளை எதிர்காலத்தில் நிவர்த்தி செய்யத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதும் இவ்விஜயத்தின் நோக்கமாகும்.

இவ்விஜயத்தின் தவிசாளருடன் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஷாபிறா வஸீம், சிரேஷ்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எம்.எச்.எம்.பழீல், சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் பலரும் சென்றிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here