ராஜித, ரூமிக்கு எதிராக குற்றப்பத்திரிகை!

வௌ்ளை வாகனத்தில் தமிழர்களை கடத்தி முதலைக்கு போட்ட விவகாரத்தை குறிப்பிட்ட ஊடக சந்திப்பு தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை கோப்புக்களை பரிசீலனை செய்த பின்னர் சட்டமா அதிபரினால் பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை மேல்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, தண்டனைச் சட்டத்தின் கீழ் பொய் சாட்சிகளை தயாரித்தல், ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை பாதிக்கக்கூடிய வகையில் செயற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் ராஜித உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளது.

அதேபோல், குறித்த ஊடக சந்திப்புடன் தொடர்புடைய மற்றைய இரு சந்தேகநபர்களும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு வழக்கின் சாட்சியாளர்களாக பெயரிடப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி நிஷாரா ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here