வைத்தியசாலையென்ற பெயரில் இயங்கிய கருக்கலைப்பு மையம்: பல பெண்கள் சிக்கினர்!

நிட்டம்புவ பிரதேசத்தில் நீண்ட காலமாக இரகசியமான முறையில் இயங்கி வந்த சட்டவிரோத கருக்கலைப்பு மையம் ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.

நிட்டம்புவ காவற்துறையினால் குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் மருத்துவர் ஒருவர் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 5 யுவதிகள், 2 கர்ப்பிணிப் பெண்கள்,  04 ஆண்கள் என 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு செய்யப்பட்ட மருத்துவமனையென்ற பெயரில் இயங்கிய சட்டவிரோத கருக்கலைப்பு மையம் இது. கருக்கலைபபிற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள், மருந்துகள் மற்றும் தேசிய அடையாள அட்டைகள் இதன்போது மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

குறித்த கருகலைப்பு நடவடிக்கைக்கு 40 ஆயிரம் ரூபா பெற்றுக் கொள்ளப்படுவதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

பொலிசாரால் தயார்ப்படுத்தப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணொருவர் அங்கு சென்று, சிகிச்சைக்கான பணம் செலுத்தியதை தொடர்ந்து, பொலிசார் அதிரடியாக கருக்கலைப்பு மையத்திற்குள் நுழைந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here