யாழ் போதனா வைத்தியசாலை 7ஆம் விடுதி நோயாளிக்கு கொரோனா இல்லை: 76 பேர் விடுவிப்பு!

கொரோனா தொற்று சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 76 பேரும் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 7ஆம் விடுதியில் சிகிச்சை பெற்ற ஒருவருக்கு கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த விடுதியில் சிகிச்சை பெற்ற 76 நோயாளிகள் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டனர்.

இதனடிப்படையில் வடக்கு மாகாணம் மற்றும் வெளி மாகாணங்களைச் சேர்ந்த சுமார் 76 பேர் அவர்களது வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர். அவ்வாறு சுய தனிமைப்படுத்தப்பட்டவர்களில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 63 பேரும்,முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த 6 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த 2 பேரும், வவுனியாவை சேர்ந்த 2 பேரும், புத்தளம், பொலநறுவை, குருநாகல் மாவட்டத்தை சேர்ந்த தலா ஒவ்வருவருமாக 76 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் கொழும்பில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு கடந்த இரண்டு நாட்களாக மேற்கொண்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து அவர் வைத்தியசாலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதனால் தொற்று நோய் தடுப்பு பிரிவினருடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்ட 76 போரும் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர், முதலிரண்டு முறை சோதனை செய்யப்பட்டபோது, தொற்று இல்லையென்றே தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here