யானை தாக்குதலால் வீடு சேதம்!

கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வாகனேரி கிராமத்தினுள் வியாழக்கிழமை இரவு புகுந்த யானையினால் வீடு ஒன்று சேதமாக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவர் தெரிவித்தார்.

இரவு வாகனேரியில் உறக்கத்தில் இருந்த சமயத்தில் வந்த யானை வீட்டினை சேதப்படுத்திய போது வீட்டின் உரிமையாளர் சித்திரவேல் விமல்ராஜ், அவரது மனைவி, மூன்று பிள்ளைகள் மயிரிளையில் உயிர் தப்பி ஓடிச் சென்றுள்ளனர்.

இதன்காரணமாக வீடு சேமதாக்கப்பட்ட நிலையில் உடைகள் துவம்சம் செய்யப்பட்டு காணப்பட்டது. இதனை கேள்வியுற்ற ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் கே.யோகேஸ்வரன் சம்பவ இடத்திற்கு சென்று நிலைமைகளை பார்வையிட்டார்.

எல்லைப்புற கிராம மக்கள் காட்டு யானைகளின் தாக்கங்களினால் தொடர்ந்தும் பாதிப்படைந்து வருகின்றனர். யானை வேலி அமைப்பது தொடர்பாக பல தடவை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் கே.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here