நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போதைப்பொருள் கடத்திய பருந்து!

மீகொடை, நாவலமுல்ல, மயான வீதி பிரதேசத்தில் அமைந்துள்ள பண்ணை ஒன்றில் கூட்டில் அடைக்கப்பட்டிருந்த போது நேற்று (30) கண்டுபிடிக்கப்பட்ட பருந்து இன்று ஹோமாகம நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.

பாதாள உலகக்குழு தலைவரான அங்கொட லொக்காவால் போதைப்பொருள் விநியோகத்திற்காக பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் குறித்த பருந்து அதுருகிரிய பொலிஸாரால் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது.

மேல் மாகாண புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய மீகொடை, நாவலமுல்ல, மயான வீதி பிரதேசத்தில் அமைந்துள்ள பண்ணை ஒன்றில் கூட்டில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த பருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த பருந்து சுமார் 15 கிலோ கிராம் எடை கொண்ட பொருட்களை தூக்கிச் செல்லக்கூடியது என தெரிவிக்கப்படுகிறது.

இந்த இன பருந்துகளை கட்டளைகளைப் பின்பற்றக்கூடிய வகையில் பயிற்சி அளிக்க முடியும் என வனவிலங்கு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அங்கொட லொக்காவினால் கடல்வழியாக பருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மன்னார் பகுதியிலுள்ள பண்ணையொன்றில் வைக்கப்பட்டு, அ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here