திருகோணமலையில் சம்பந்தனை வெற்றியடைய வைக்கும் பொறுப்பை தலைவர் என்னிடம் தந்தார்!

43 வருடம் திருகோணமலையில் எம்.பியாக இருந்த இரா.சம்பந்தன் அந்த மண்ணிற்கு எதையும் செய்யவில்லை. திருகோணமலையின் தமிழ் பிரதிநிதித்துவத்தையும், மண்ணையும் பறிபோகவிட்டு மௌனமாக இருந்தவர். 2001 இல் திருகோணமலையில் தமிழ் பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்தி வ்ருமாறு தலைவர் பிரபாகரன் பணித்திருந்தார். அதன்படி அந்த வருடத்தில் திருகோணமலையில் சம்பந்தனை வெறறியடைய வைத்தோம்  என தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர் ரூபன்.

இன்று யாழில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போதே இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தேவையான காலங்களில் தேவையான மாற்றம் அவசியம். 1947ஆம் ஆண்டுகளில் வடக்கு கிழக்கில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் என்ற ஒரு கட்சிதான் இருந்தது. ஜி.ஜியின் தலைமைத்துவத்தை ஏற்று, எஸ்.ஜே.வி செல்வநாயகமும் செயற்பட்டார்.

1948ஆம் ஆண்டு மலையக மக்களின் குடியுரிமையை பறிக்கும் சட்டமூலத்துடன், எஸ்.ஜே.வி.செல்வநாயகம் வெளியேறினார். அவர் வெளியேறி தனிக்கட்சி தொடங்கியதன் பின்னர், அது தமிழ் அரசு கட்சி, தமிழர் விடுதலை கூட்டணி, தமிழ் தேசிய கூட்டணியாக செயற்பட்டது. அன்று அவர் அந்த முடிவை எடுத்திருக்காவிட்டால், தமிழினம் விலை போகின்றவர்களாக மாறியிருப்போம்.

தந்தை செல்வா மரணித்த பின்னரும் முழு தமிழர்களாலும் தலைவராக அவர் ஏற்றுக்கொள்ளப்பட்டார். அப்படியான நிலைமை இன்று உருவாகியிருக்கிறது. இன்று உறுதியான தலைமை எமக்கு தேவையாக உள்ளது.

கட்சிகளின் பெயர்தான் புதிதாக இருக்குமே தவிர, அதை நடத்துபவர்கள் தமிழ் மக்களின் பிரச்சனைகளில் ஆழமான புரிதல் உள்ளவர்கள்.கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பை நம்பி ஆட்சியதிகாரத்தை வழங்க முடியாது. கிழக்கில் எந்த மாவட்டத்திற்கு சென்றாலும், அங்கு தமிழர்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டு விட்டது. கிழக்கில் எந்த இடத்தில் தமிழ் வேட்பாளர்களை நிறுத்தினாலும் அங்கு சவாலாகவே உள்ளத.

அம்பாறை 17 வீதம்தான் தமிழர்கள். 47,48ஆம் ஆண்டுகளில் திருகோணமலை முழு தமிழர்களுடையாக இருந்தது. இதன் பின்னர்தான் நிலைமை மாறியது.இப்பொழுது ஜனநாயகப் போராளிகள் என சொல்லிக் கொண்டிருப்பவர்கள் யாரும், விடுதலைப் புலிகள் அமைப்பில் அடையாளம் காணப்பட்டவர்கள் அல்ல. விடுதலைப் புலிகளின் காலத்தில் அரசியல்த்துறையில் முகாம் பராமரிப்பாளர்களாகவே துளசி, கதிர் போன்றவர்கள் இருந்தார்கள். புலிகள் அமைப்பில் பெயர் தெரியாதவர்களாகவும், உருப்படியான எந்த வேலையை செய்யாதவர்களாகவுமே இருந்தார்கள்.

இவர்கள் வசதி வாய்ப்பிற்காக எந்த கட்சியிடமும் போகக்கூடியவர்கள். வசதி கிடைக்கும் அனைவரிடமும் காசு வாங்கியுள்ளனர். அதற்கான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளது.

அவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் என்ன செய்தார்கள் என கேட்டீர்கள் என்றால், தமிழ் செல்வனிற்கு பின்னால் நின்றோம் என்றுதான் சொல்வார்கள். வேறு எந்த உருப்படியான வேலையும் செய்யவில்லை. அப்படியானவர்கள், இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பை பொறுப்பெடுக்கப் போகிறோம் என மனநிலையை வளர்த்து வைத்திருக்கிறார்கள் என்றால், என்னைப் பொறுத்தவரை அவர்கள் மனநோயாளிகளாகத்தான் இருப்பார்கள்.

ஜனநாயகப் போராளிகள் இன்று திருகோணமலையில் சம்பந்தனை ஆதரிக்கிறார்கள். 43 வருடமாக திருகோணமலையில் சம்பந்தன் ஐயாதான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். இந்தக்காலப்பகுதியில் என்ன செய்தார்? திருகோணமலையின் பெருமளவான பகுதியை பறிகொடுத்துள்ளார். தமிழ் பிரதிநிதித்துவத்தை இழக்க வைத்துள்ளார். இவரது காலப்பகுதியில் மண்ணையும், தமிழ் பிரதிநிதித்துவத்தையும் பறிகொடுத்துள்ளோம்.

திருகோணமலையில் சிங்கள குடியேற்றங்களையும், முஸ்லிம் குடியேற்றங்களையும் எப்படி கொண்டு வந்து சேர்த்தீர்கள் என நீங்கள் சம்பந்தனிடம் கேட்க வேண்டும். அவர் தனக்கு தெரியாது என்றுதான் சொல்லுவார். ஏனெனில் உண்மையிலேயே அவருக்கு தெரியாது. ஏனெனில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானால் கொழும்பில் இருப்பார் அல்லது இந்தியாவில் இருப்பார்.

2001ஆம் ஆண்டு இழந்த தமிழ் பிரதிநிதித்தவத்தை பெற, தலைவர் பிரபாகரன் என்னை பணித்தார். திருகோணமலையில் ஒரு பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்திவிட்டு வருமாறு பணித்தார். அதன்படி, அந்த வருடத்தில் திருகோணமலையில் சம்பந்தன் வெற்றியடைந்தார் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here