மன்னார் மறைமாவட்டத்தைச் சேர்ந்த 8 திருத்தொண்டர்கள் அருட்பணியாளர்களாக அருட்பொழிவு

மன்னார் மறைமாவட்டத்தைச் சேர்ந்த 8 திருத்தொண்டர்கள் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை அவர்களால் அருட்பணியார்களாக அருட்பொழிவு செய்யப்பட்டனர்.

மன்னார் புனித செபஸ்ரியார் பேராலயத்தில் அருட்பணியார் அருட்பொழிவுத் திருப்பலி இன்று (30) வியாழக்கிழமை காலை இடம் பெற்றது.

இதன் போது அருட்பணி.த.ஜொலிமன், அருட்பணி.எ.ஜோர்ஜ்கரன், செ.அருண்தாஸ்குரூஸ், அருட்பணி.பி.பிரசாந்தன், அருட்பணி.கு.கிருஸாந், அருட்பணி.செ.யூட் ரவீந்திரன், அ.அன்ரனி மரியதாஸ் குரூஸ், அருட்பணி.ம.டிலான் ஆகியோர் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை அவர்களினால் அருட்பணியாளர்களாக அருட் பொழிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here