சஜித்தின் உறுப்புரிமை குறித்து விரைவில் முடிவு!

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதமர் வேட்பாளராக போட்டியிடும், ஐ.தே.க துணைத்தலைவராக செயற்பட்ட சஜித் பிரேமதாசவின், கட்சி உறுப்புரிமையை நீக்குவது குறித்து விரைவில் முடிவெடுக்கவுள்ளதாக ஐ.தே.க வட்டாரங்கள் தெரிவித்தன.

பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் 54 உறுப்பினர்களை இந்த வாரம் ஐக்கிய தேசியக் கட்சி நீக்கியது.

இதேவேளை, கட்சியின் பிரச்சார நடவடிக்கைகளில் பங்களிக்காத மேலும் 61 உள்ளூராட்சி உறுப்பினர்களையும் ஐ.தே.க நீக்கியது.

இருப்பினும் சஜித் பிரேமதாச இன்னும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினராக உள்ளார்.

ஐ.தே.கவின் 102 உறுப்பினர்களை நீக்குவதாக, கட்சியின் செயற்குழு கடந்த மே 29ஆம் திகதி முடிவெடுத்தது. இதற்கு தடையுத்தரவு பிறப்பிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் மறுத்திருந்தது.

இதன்பின்னர், மேல் மாகாண சிவில் மேல்முறையீட்டு உயர்நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேன்முறையீட்டையும் நீதிமன்றம் நிராகரித்திருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here