கின்னஸ் பதிவேட்டில் இடம்பெறவுள்ள இலங்கை இராணுவ அதிகாரிகளான இரட்டையர்கள்!

இலங்கை இராணுவத்தின் இரட்டையர்களான மேஜர் ஜெனரல் தர அதிகாரிகள் இருவர், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடிப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் இன்று இடம்பெற்றன.

இராணுவ தலைமையகத்தில் இன்று நடந்த நிகழ்வொன்றில் இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, கின்னஸ் உலக சாதனைக்கான இலங்கையின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி சமன் அமரசிங்க,மற்றும் விளையாட்டு அமைச்சு அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இராணுவ்தின் சமிக்ஞை பிரிவில் கடமையாற்றிய மேஜர் ஜெனரல் பூரக செனவிரத்ன, சிங்க ரெஜிமென்ட்டின் மேஜர் ஜெனரல் ஜெயந்த செனவிரத்ன ஆகிய இரட்டையவர்களே கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும், நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இரட்டையர்களான இவர்கள் ஒரே நாளில் இராணுவத்தில் இணைந்து, ஒரே நாளில் நியமனம் பெற்று, ஒரே சமயத்தில் வெளிநாட்டு கற்கைகளை பூர்த்தி செய்து, ஒரே நேரத்தில் பதவி உயர்வுகளை பெற்று, சம தரத்தில்- மேஜர் ஜெனரல்களாக- ஒரே நாளில் ஓய்வுபெறவுள்ளனர்.

அவர்களின் பிறப்பு சான்றிதழ்களை உறுதிசெய்து உதவிப்பதிவாளர் நாயகம், கின்னஸின் இலங்கைக்கான பிரதிநிதியிடம் ஒப்படைத்தார்.

இரட்டையவர்களின் இராணுவ வாழ்க்கை தரவுகளை உறுதிசெய்த இராணுவத்தளபதி, அது குறித்த ஆவணங்களை ஒப்படைத்தார்.

அவை கின்னஸ் குழுவிற்கு அனுப்பப்பட்டு, கின்னஸ் பதிவேட்டில் அவர்களின் பெயர் விரைவில் இடம்பெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here