கம்பெரலிய தோல்வியடைந்த திட்டம்: பொன்சேகா!

நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்த கம்பெரலிய திட்டம் தோ்வியடைந்த திட்டம் என முன்னாள் எம்.பி, ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஜா-எலவில் நடந்த பிரச்சார கூட்டமொன்றில் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.

கம்பெரலிய திட்டத்தினால் மேல் மாகாணத்திற்கு எந்த பலனும் இல்லயென தெரிவித்தார்.

மேல் மாகாணத்தில் ஐ.தே.கவிற்கு அதிகமான மக்கள் வாக்களித்த போதிலும், மக்களின் கவலைகளிற்கு அரசு பதிலளிக்கவில்லையென தெரிவித்தார்.

கம்பெரலிய திட்டத்தின் விதிகள் காரணமாக மேல் மாகாணத்தில் எதையும் செய்ய முடியவில்லையென்றார்.

சிறிதளவு தூரமான வீதிகளே கொங்கிரீட் இட அனுமதிக்கப்படுகிறது. இதனால் எஞ்சிய வீதியிலுள்ள மக்கள் கோபப்பட்டனர். அப்படி வீதியை அபிவிருத்தி செய்வது நியாயமில்லை.

ஒரு மைதானம் அமைக்க 1 மில்லியன் ரூபா வரை அனுமதிக்கப்பட்டது. இருப்பினும் மேற்கு மாகாணத்தில் ஒரு நிலத்தில் புல் வெட்டுவதற்கு 1 மில்லியனுக்கும் அதிகமாக செலவாகும்.

முன்னைய அரசில் மக்களிற்கு விரும்பியதை வழங்காமல், ஆட்சியாளர்களிற்கு விரும்பியதை வழங்கினோம். தேவைப்படாத இடங்களில் கூரைத்தகடுகள் வழங்கப்பட்டன.

அப்போது அதிகாரத்திலிருந்தவர்களிற்கு நாட்ட மக்கள் உண்மையில் எப்படி வாழ்கிறார்கள் என்பது தெரியவில்லை. இதனால் கம்பெரலிய திட்டம் தோல்வியடைந்தது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here