குளவி கொட்டி 3 பேர் காயம்!

மஸ்கெலிய பொலிஸ் பிரிவிற்க்குற்பட்ட சாமிமலை சூரியகாந்த தோட்டத்தில் இன்று காலை (30)  மூவர் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

தேயிலை மலையில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த தொழிலாளர்களே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர் .

பாதிக்கப்பட்ட மூவரும்  மஸ்கெலிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

( சாமிமலை எஸ் .ஞானராஜ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here