வந்தான் வரத்தான் எல்லாம் புலிகள் அல்ல; ஜனநாயகப் போராளிகளின் தோலை உரிக்கிறார் மூத்த போராளி ரூபன்!

ஜனநாயகப் போராளிகள் என்ற பெயரில் இயங்குபவர்கள் உண்மையான போராளிகள் அல்ல. வந்தான், வரத்தான் எல்லாம் இப்பொழுது விடுதலைப் புலிகள் என்ற பெயரில் திரிகிறார்கள் என அம்பலப்படுத்தியுள்ளார் விடுதலைப் புலிகளின் மூத்த போராளியும், தற்போதைய தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் திருகோணமலை மாவட்ட வேட்பாளருமான ரூபன்.

இன்று யாழ் ஊடக மையத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

இப்பொழுது இவர்கள் மஹிந்தவுடனும் நிற்கிறார்கள், கோட்டாபயவுடனும் நிற்கிறார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்புடனும் நிற்கிறார்கள். உண்மையான தலைவர்கள் ஒரு தலைமையின் கீழ்த்தான் நிற்பார்கள். இவர்கள் எல்லா இடமும் நிற்கிறார்கள்.

இவர்கள் எங்கு இருந்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here