தாமரைப்பூ பறிக்கச்சென்று நீரில் மூழ்கியவர் சடலமாக மீட்பு! (PHOTO)

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ரிதிதென்னை ஜெயந்தியாய குளத்தில் தாமரைப்பூ பறிக்க சென்றபோது, காணாமல் போனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று (29)இருவர் தோணியில் சென்ற போது தோணி கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி ஒருவர் காணாமல் போனார். மற்றவர் காப்பாற்றப்பட்டார்.

திருப்பெருந்துறை 5ம் குறுக்கு வீதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 34 வயதுடைய செல்வராசா சத்தியா என்பவரே இவ்வாறு குளத்தில் மூழ்கி காணாமால் போனார்.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த அவருடைய நண்பன் எஸ்.சுமன் என்பவருடன் திருப்பெருந்துறை காளி கோவில் உற்சவத்திற்கு தமரைப்பூ பறிப்பதற்காக காலை 7 மணிக்கு வீட்டில் இருந்து வெளியே சென்று ரிதிதென்னை ஜெயந்தியாய குளத்தில் தோணி ஒன்றில் தமரைப்பூ பறிக்க குளத்தின் நடுப்பகுதிக்கு சென்ற நிலையில் தோணி கவிழ்ந்தததையடுத்து இருவரும் நீரில் மூழ்கிய நிலையில் சுமன் நீந்தி தப்பி கரைசேர்ந்துள்ளார்.

நீரில் மூழ்கியவரை தேடும் பணிகள் இடம்பெற்ற நிலையில், அவர் சடலமாக மீட்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here