நீர்கொழும்பு சிறையதிகாரி கைது செய்யப்படாமைக்கு நீதிமன்றத்தில் அதிருப்தி!

நீ்ர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் கண்காணிப்பாளர் அனுருத்த சம்பயோவை கைது செய்ய நீ்ர்கொழும்பு நீதிமன்றம் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, 8 நாட்களான போதும் அவர் இதுவரை சிக்கவில்லை.

அவரது வீட்டிலிருந்த மனைவி, பிள்ளைகளும் தலைமறைவாகியுள்ளனர். அவரது இருப்பிடத்தை கண்டறியும் தொழில்நுட்ப வாய்ப்புக்களையும் அவர் இல்லாமல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், நாட்டில் 87,000 பொலிஸார் கடமையிலுள்ள நிலையில், 65,000 சதுர கிலோமீற்றர் பரப்பளவிற்குள் மறைந்துள்ள நபரை, 7 நாட்கள் கடந்தும் கண்டறிய முடியாதது மோசமான நிலைமை என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப் பீரிஸ் நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஊழல் அதிகாரிகளை சிறையிலிருந்து நீக்குவதில் சட்டமா அதிபரின் பங்கை ஐ.ஜி.பி ஆதரிக்கவில்லை என்றும், நாளைக்கு முன்னர் சந்தேக நபரை கைது செய்ய முடியாவிட்டால், இந்த விவகாரம் குறித்து விசாரிக்க ஐ.ஜி.பி தனிப்பட்ட முறையில் நீதிமன்றத்திற்கு வரவழைக்கப்பட வேண்டும் என்றும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.

இதேவேளை, பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பின்னர் சரணடைந்த முன்னாள் சிறை அதிகாரிகள் சரத் பண்டாரா, நிஷாந்தா சேனரத்ன மற்றும் கலிங்க கலுவாகல ஆகியோர் ஓகஸ்ட் 04 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here