சுசாந்த்சிங் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ரியா சக்கரபர்த்தி புது மனு

பாலிவுட் நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை வழக்கில், பீஹார் போலீசார் பதிந்துள்ள வழக்கை மும்பைக்கு மாற்ற கோரி அவரது காதலி ரியா சக்கரபர்த்தி மீதான உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கடந்த ஜூன் 14-ம் தேதி மும்பை பந்த்ராவில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் பாலிவுட் நடிகர் சுசாந்த் சிங், 34 தற்கொலை செய்து கொண்டார்.

பாலிவுட்டில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கத்தால் கடந்த 6 மாதம் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதால் இந்த முடிவு எடுத்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

சுசாந்த்சிங் தற்கொலை குறித்து மும்பை பந்த்ரா போலீசார் இதுவரை சினிமா பிரபலங்களான சஞ்சய் லீலா பன்சாலி, ஆதித்யா சோப்ரா, சினிமா விமர்சகர் ராஜிவ் மசாந்த் , நடிகை கங்கனா ரணவத், படத்தயாரிப்பாளர் கரன்ஜோஹர், உள்ளிட்ட 40 சினிமா பிரபலங்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் சுசாந்த் சிங் ராஜ்புத்தின் தந்தை , சுசாந்த்சிங்கின் காதலி ரியா சக்கரபர்த்தி மீது பீஹார் மாநிலம் பாட்னா போலீசில் வழக்கு தொடர கோரி புகார் மனு கொடுத்தார். இதையடுத்து தன் மீது பாட்னா போலீசார் பதிந்துள்ள வழக்கை மும்பைக்கு மாற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here