கூட்டமைப்பில் இளைஞர் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வையுங்கள்: மயூரன்!

இந்த முறை தேர்தலில் இளைஞரான எனக்கான ஒரு அங்கீகாரம் வழங்கவில்லை என்றால் அது நிராகரிக்கப்படும் சந்தத்தில் எதிர்காலத்திலே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக ஒரு இளைஞர் பிரதிநிதித்துவம் இடம்பெறாமல் போவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வீட்டு சின்னத்தில் இலக்கம் இரண்டில் போட்டியிடும் இளம் வேட்ப்பாளரான செந்தில்நாதன் மயூரன் தெரிவித்துள்ளார்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வேணாவில் பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தின் போது கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கருத்து தெரிவித்தார்

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில் 2009 ஆம் ஆண்டு எங்களுடைய ஆயுதப் போராட்டம் முடிவடைந்த பிறகு இன்று 2020 ஆம் ஆண்டு எங்களுடைய அரசியல் ரீதியான போராட்டத்தையும் எங்களுடைய அரசியல் இருப்பையும் இல்லாமல் செய்வதற்காக பல சுயேச்சைக் குழுக்கள் பல சிங்கள தேசிய கட்சிகள் எங்களுடைய வன்னி மாவட்டத்தை ஆக்கிரமித்திருக்கின்றன

எங்களுடைய அரசியல் ரீதியான எங்களுக்கான ஒரு தீர்வை நிச்சயமாக இங்கே இருக்கின்ற இங்கே ஆளுகின்ற அல்லது ஆள போகின்றவர்கள் நிச்சயமாக எங்களுக்கான ஒரு அரசியல் தீர்வையும் இங்கே எங்களுக்கு தரப்போவதில்லை

காரணம் எங்களுக்கான எங்களுடைய வடக்கு கிழக்கு மண்ணிலே எங்களுக்கான ஒரு அரசியல் இருப்பை தருபவர்களாக இருந்தால் அவர்களுடைய கட்சி இந்த வன்னி மாவட்டத்தில் நிச்சயமாக போட்டியிட்டு இருக்க மாட்டாது எங்களுக்கான எங்களுடைய அரசியல் இருப்பை நாங்களே பெற்றுக் கொள்கின்ற விதத்திலே தமிழ் பேசுகின்ற மக்கள் மட்டுமே தங்களுடைய ஏகப்பிரதிநிதிகள் என்று கூறுகின்ற சொல்லுகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஓடு போட்டியிடுகின்ற தமிழ் கட்சிகள் மட்டுமே இந்த தேர்தலில் போட்டியிட்டு இருக்கும்

ஆனால் தேசிய கட்சிகள் எங்களுடைய மண்ணிலே எங்களை எதிர்த்து போராடுகின்ற அல்லது எதிர்த்து போட்டியிடுகின்ற நிலையில் இருக்கின்றோம் எனவே இதிலிருந்து ஒன்றை மட்டும் நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் எங்களுக்கான ஒரு அரசியல் தீர்வைஇவர்கள் நிச்சயமாக தர மாட்டார்கள்

இதற்கான ஒரே வழி நாங்கள் தான் அதனை பெற்றுக்கொள்ள வேண்டும் அதற்கான ஒரே வழி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக எங்களுக்கு அதிகளவான பாராளுமன்ற உறுப்பினர்களை அனுப்பி நாங்கள் எங்களுக்கான அந்த அரசியல் உரிமையையும் எமதுஅரசியல் இருப்பையும் தக்கவைப்பதற்காக தமிழ் பேசுகின்ற மக்கள் அனைவரும் ஒன்றாக அணிதிரளவேண்டிய தருணம் இந்த 2020 ம் ஆண்டு இடம்பெறப்போகின்ற இந்த பாராளுமன்ற தேர்தல்

எங்களுடைய அரசியல் இருப்பு இன்று கேள்வி குறியாக இருக்கின்றது நாங்கள் வாழ்வதா வீழ்வதா சாவதா என்ற நிலையில் இருக்கின்றோம் நாங்கள் வாழ்வதும் வீழ்வதும் சாவதும் அன்பார்ந்த தமிழ் பேசுகின்ற உறவுகளே எங்களது கைகளில் தான் இருக்கின்றது என்பதை புரிந்துகொள்ள வேண்டும் காலம் மாறிக்கொண்டிருக்கிறது காலத்தை மாற்றி கொண்டிருக்கின்றோம் எமக்கான காலம் வருமென்று கைகட்டி நிற்க நாங்கள் தயாராக இல்லை எமக்கான காலத்தை படைப்பவர்களாக 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற போகின்ற பாராளுமன்றத் தேர்தலில் இளைஞர்களாக நாங்கள் களமிறங்கியிருக்கிறோம் எனவே எங்களுடைய அரசியல் இருப்பை நாங்கள் பாதுகாப்பதற்காக இந்த 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் இளைஞர்களாக நாங்களும் உங்களுடன் இருக்கின்றோம் நாங்கள் சோரம் போகின்றவர்கள் அல்ல எமக்கான இருப்பை நாங்கள் பாதுகாக்கிறோம் என்ற நிலையை வருகின்ற தேர்தல் ஊடாக நாங்கள் நிரூபிப்போம் நாங்கள் ஒருமித்த குரலாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுடைய பிரதிநிதி என்று சொல்கின்ற விதத்திலே நாங்கள் எங்களுடைய அரசியல் இருப்பை நாங்கள் நிச்சயமாக தக்க வைக்க வேண்டும்

இந்த முறை தேர்தலில் எங்களுக்கான ஒரு அங்கீகாரம் வழங்கவில்லை என்றால் அது நிராகரிக்கப்படும் சந்தர்ப்பத்தில் எதிர்காலத்திலே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக ஒரு இளைஞர் பிரதிநிதித்துவம் நிச்சயமாக இனிவரும் காலங்களில் இடம்பெறாமல் போவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன எனவே எனக்கும் இலக்கம் இரண்டுக்கு விருப்பு வாக்கினை அளிக்குமாறும் கோருகின்றேன் என அவர் தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here