அரச அதிகாரிகள் இலஞ்சம் பெறும் வீதம் இந்த ஆண்டு அதிகரிப்பு!

அரச அதிகாரிகள் இலஞ்சம் பெறும் வீதம், கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட 17 சுற்றிவளைப்புக்களில் 21 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பத்மினி வீரசூரிய தெரிவித்துள்ளார்.

அதிபர் ஒருவர், பொலிஸ் சார்ஜன்கள் நால்வர், கான்ஸ்டபிள் ஒருவர், பொலிஸ் பரிசோதகர் ஒருவர், உப பொலிஸ் பரிசோதகர்கள் இருவர், நேரக்கட்டுப்பாட்டாளர் ஒருவர் கைது செய்யப்பட்டவர்களில் உள்ளடங்குகின்றனர்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள பதிவாளர், மத்திய கலாசார நிதியத்தின் செயற்திட்ட முமையாளர், பிரதேச செயலாளர், பிரதிப்பணிப்பாள், கிராமசேவகர் ஆகியோரும் கைதானவர்களில் உள்ளடங்குகின்றனர்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் ஊழல் குற்றச்சாட்டுக்கள் அதிகரித்திருந்ததாகவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here