சிட்னி கொரோனா பரவலின் மையம்!


கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரம் கொரோனா பரவலின் மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிட்னி நகரில் புதன்கிழமை மட்டும் 19 பேருக்குக் கொரோனா நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சிட்னியில் கொரோனா தொற்று சமூகப் பரவலாக மாறி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தற்போது சிட்னி நகர் கொரோனா பரவலின் மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிட்னியிலிருந்து வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட உள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் இதுவரை 15,304 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 167 பேர் பலியாகி உள்ளனர். இன்று மட்டும் 295 பேருக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

விக்டோரியா மாகாணத்தில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதைத் தொடர்ந்து, அங்கு கொரோனா பரிசோதனை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆறு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் மெல்போர்ன் மற்றும் விக்டோரியா மாகாணங்களில் கொரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. அதனைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக முன்னரேஇ ராணுவம் அழைக்கப்பட்டிருந்தது.

அவுஸ்திரேலியாவில் கொரோனா பரவல் 75% கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், 2020 ஆம் ஆண்டுவரை எல்லை மூடலைத் தொடர இருப்பதாக அந்நாடு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் அங்கு கொரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here