4 வாகனங்களை மீள வழங்கிய சந்திரிகா!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது அலுவலகத்திற்காக ஒதுக்கப்பட்ட நான்கு வாகனங்களை மீள அரசாங்கத்திடம் வழங்கியுள்ளார். அரசு எதிர்கொள்ளும் நிதி நெருக்கடியை கருத்திற் கொண்டு,  இந்த மாத தொடக்கத்தில் சந்திரிகா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

தனது அலுவலகத்திற்கு ஒதுக்கப்பட்ட இன்னொரு வாகனத்தையும் திருப்பி ஒப்படைக்க தயாராக இருப்பதாக சந்திரிகா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளருக்க இது குறித்து கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

தனது தனிப்பட்ட பயன்பாட்டிற்கு 9 வாகனங்களும், பாதகாப்பு பிரிவிற்கு 3 வாகனங்களுமாக 12 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் 4 வாகனங்களை மீள ஒப்படைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மெர்சிடிஸ் பென்ஸ் கார் (மொடல் எஸ் 600), நிசான் ரோந்து ஜீப், மகேந்திர டபுள் கப் மற்றும் டொயோட்டா லாண்ட் குரூசர்-ஜீப் ஆகிய வாகனங்களே மீள ஒப்படைக்கப்பட்டுள்ளன.

மீதமுள்ள எட்டு வாகனங்களில் இன்னொன்றைத் திருப்பித் தருவதாகவும் கடிதத்தில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here