சிறிலங்கா கிரிக்கெட்டின் புதிய துணைத்தலைவராக ஜெயந்த தர்மதாச!

இலங்கை கிரிக்கெட்டின் புதிய துணைத் தலைவராக ஜெயந்த தர்மதாச நியமிக்கப்பட்டுள்ளார். கே.மதிவாணன் தனது பதவியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் நடைபெற்ற இலங்கை கிரிக்கெட்டின் அவசரக் கூட்டத்தில், புதிய நியமனத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இலங்கை கிரிக்கெட்டின் துணைத் தலைவர் பதவியை வகித்த மதிவாணன் இன்று தனது ராஜினாமாவை வழங்கினார். இலங்கை கிரிக்கெட் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டது.

ஒரு அலுவலக பொறுப்பாளராக நெறிமுறையற்ற நடைமுறைகளில் ஈடுபட்டதற்காக மதிவாணனுக்கு எதிராக விசாரணை நடத்த நிர்வாகக் குழுவின் சமீபத்திய முடிவை அடுத்து அவர் பதவி விலகியதாக, கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்தது.

எனினும், ஒரு அறிக்கையை வெளியிட்ட மதிவாணன், சிறிலங்கா கிரிக்கெட்டின் அதிகாரிகளின் வினைத்திறனில்லாத நடவடிக்கையால் விலகுவதாக தெரிவித்திருந்தார்.

ந்தவொரு பெரிய பொறுப்புகளும் அவருக்கு வழங்கப்படவில்லை என்பதால்பதவி விலக முடிவு செய்ததாக மதிவாணன் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here