யாழில் 33 கிலோ கஞ்சாவுடன் சிக்கிய இளைஞன்!

யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் பாவனையில்லாத கட்டடத்தில் விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த 33 கிலோ கஞ்சாவுடன் இளைஞன் ஒருவரை இன்று யாழ்ப்பாண பொலிசார் கைது செய்துள்ளனர்.

புத்தளம் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபரே பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளர். கைது செய்யப்பட்டவருடன் பழைய கட்டடம் ஒன்றினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 33.450 கிலோகிராம் கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கைது செய்தவரிடம்மேலதிக விசாரணை மேற்கொண்ட யாழ்ப்பாண பொலிஸார் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here