லீக் ஆனது சர்க்கார் வீடியோ: அதிர்ச்சியில் படக்குழு!

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் சர்க்கார். துப்பாக்கி, கத்தி ஆகிய படங்களை தொடர்ந்து இவர்கள் இந்த படத்தில் கைகோர்த்துள்ளனர்.

விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வரலட்சுமி சரத்குமார், ராதாரவி ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். வரும் தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளனர்.

படத்தின் முக்கிய பாடல் காட்சி அண்மையில் வெளிநாட்டில் படமாக்கப்பட்டது. இந்த நிலையில், அந்த காட்சியின் முக்கிய வீடியோ ஒன்ற அண்மையில் இணையத்தில் லீக் ஆனது. இதனால் படக்குழு அதிர்ச்சியானது. வீடியோ எப்படி லீக் ஆனது என முருகதாஸ் தீவிர விசாரணை நடத்தினார்.

பாடல் காட்சியில் பங்குகொண்ட வெளிநாட்டு கலைஞர்கள்தான் வீடியோவை லீக் செய்தார்கள் என்ற விசயம் தெரிய வந்துள்ளது. மேலும், விஜய் உடன் எடுத்த புகைப்படங்களையும் அவர்கள் பகிர்ந்துள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here