சஹ்ரான் குறித்து தேசிய பாதுகாப்புசபைக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்பே சஹ்ரான் ஹாஷிம் குறித்து தேசிய பாதுகாப்பு சபைக்கு கடந்த ஜனவரி மாதம் எழுத்துப்பூர்வமாகவும் வாய்மொழியாகவும் அறிவித்ததாக முன்னாள் அரச புலனாய்வு இயக்குனர் நிலந்த ஜெயவர்தன கூறுகிறார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் நேற்று (27) சாட்சியம் வழங்கும்போது இதனை தெரிவித்தார்.

மாவனெல்வை புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்டது, வனாத்தவில்லுவில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து சஹ்ரான் ஹாஷிமின் பயங்கரவாத செயல் குறித்து அறிவிக்கப்பட்டதாக அவர் கூறியிருந்தார்.

நிலந்த ஜெயவர்த்தனவின் சாட்சியத்தின் ஒரு பகுதி மட்டுமே ஊடகங்களுக்கு அனுமதிக்கப்பட்டது.

சஹ்ரான் ஹாஷிம் குறித்து பாதுகாப்பு கவுன்சிலுக்கு அறிக்கை அளித்ததாகவும், ஆனால் அவரை கைது செய்ய எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 4 ம் திகதி தாக்குதல் குறித்து வெளிநாட்டு உளவுத்துறை இலங்கைக்கு தகவல் வழங்கியபோதும் சஹ்ரான் ஹாஷிம் ஒரு பயங்கரவாதி என்பது தெரியுமா என்று ஜனாதிபதி ஆணைக்குழு கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கு பதிலளித்த முன்னாள் அரச புலனாய்வு இயக்குனர், சஹ்ரான் ஹாஷிம் ஐ.எஸ் சித்தாந்தத்தை ஆதரித்த ஒரு பயங்கரவாதி என்பது தனக்கு தெளிவாகத் தெரியும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here