யாழிலிருந்து சென்று வவுனியாவில் கைவரிசை காட்டிய பலே கில்லாடி சிக்கினார்!

வவுனியாவில் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இருவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் சைக்கிள்கள் களவாடப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பொலிசாருக்கு முறைப்பாடுகள் வழங்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்த பொலிசார் திருடப்பட்ட 7 சைக்கிள்களை மீட்டுள்ளதுடன் அதனுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டுபேரை கைது செய்துள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை வவுனியா தலைமை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புபிரிவு உபபொலிஸ் பரிசோதகர் பிரனீத் திஸாநாயக்க தலைமையில் பொலிஸ் சாஜன்களான திஸாநாயக்க (37348), திலீப் (61461), பொலிஸ் கொஸ்தாபல் தயாளன் (91792) ஆகியோர் அடங்கிய குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது.

சம்பவத்தில் வவுனியா குகன்நகர் மற்றும், யாழ் புத்தூர் பகுதியை சேர்ந்த 25, 29 வயதுடைய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் பின்னர் நாளைய தினம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here