ஹெல்மெட் இல்லாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டிய மொட்டு வேட்பாளருக்கு சிக்கல்!

புத்தளம் மாவட்டத்தில் பொதுஜன பெரமுனவில் போட்டியிடும் முன்னாள் எம்.பி சனத் நிஷாந்தவும், ஆதரவாளர்களும் தலைக்கவசமின்றி மோட்டார் சைக்கிள்களில் பயணித்த சம்பவம் தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபர் அறிக்கை கோரியுள்ளார்.

வட மேல் மாகாண பிரதி பொலிஸ் மா அதிபரிடம் இந்த அறிக்கை கோரப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தின் போது பொலிஸார் சட்டத்தை நடைமுறைப்படுத்தினார்களா, இல்லையா என தௌிவுபடுத்துமாறும், சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஆயின் அதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் விளக்குமாறும் கோரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

சனத் நிஷாந்தவும், அவரின் ஆதரவாளர்களும் தலைக்கவசம் இன்றி தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக மோட்டார் சைக்கிள்களில் பயணிக்கின்றமை தொடர்பான காணொளிகளும் நிழற்படங்களும் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here