மஸ்கெலியாவில் கறுப்பு உடையுடன் நடமாடும் மர்ம மனிதர்கள் யார்?: மக்கள் பீதியில்!

மஸ்கெலிய பிரதேசத்தில் கடந்த சில வாரங்களாக மர்ம நபர்களின் நடமாட்டத்தினால் இப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

கடந்த வாரம் மஸ்கெலிய பிரவுன்சிவிக் தோட்டத்தில் கருப்பு நிறத்திலான உடையணிந்த மூன்று நபர்கள் லயன் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து ஆறு வீடுகளில் பணம் நகை என்பவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளதாகவும் இது குறித்து மஸ்கெலிய பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதாகவும் இது வரைக்கும் எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் பிரவுன்சிவிக் தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இதே போன்றதொரு சம்பவம் கடந்த வாரம் மஸ்கெலிய நயன்சா தோட்டத்திலும் பதிவாகியுள்ளதையடுத்து அத்தோட்ட மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர் .

மேலும் நேற்று அதிகாலை மஸ்கெலிய நகரத்தில் எட்டு வர்த்தக நிறுவனங்கள் உடைக்கப்பட்டு அதில் ஒரு வர்த்தக நிலையத்தில் பணம் மற்றுமொரு வர்த்தக நிலையத்தில் மீள் நிரப்பு அட்டைகள் என்பன களவாடப்பட்டுள்ளது. இந்த காட்சிகள் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கெமராக்களிள் பதிவாகியிருந்தததை காணகூடியதாக இருக்கின்றது. சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மஸ்கெலிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்ற நிலையில் இது வரைக்கும் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை .

குறித்த சம்பவத்தால் இப்பகுதியில் பெரும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு நேரங்களில் தாம் பெரும் அச்சத்துடனேயே வாழ்ந்து வருவதாகவும் இப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே இப்பகுதி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும்

-சாமிமலை ஞானராஜ்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here