மத்திய கலாச்சார நிதியத்தில் 11 பில்லியன் நிதி மோசடி!

மத்திய கலாச்சார நிதியத்தில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின் படி, 2016 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரையில் மத்திய கலாச்சார நிதியத்தில், 11 பில்லியன் ரூபாய் நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அங்கீகரிக்கப்படாத வகையில் மத்திய கலாச்சார நிதியத்தில் இருந்து 400 மில்லியன் ரூபாய் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பயன்படுத்தப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த அரசாங்க காலப்பகுதியில் கலாச்சார நிதியத்திற்கு கிடைத்த நிதி பெருமளவில் முறைகேடாக பயன்படுத்தப்பட்டிருப்பதாக பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருந்ததால் அது தொடர்பில் ஆராய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் மூன்று பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.

முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் கீழ் மத்திய கலாச்சார நிதியம் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here