வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் பாஸ்போர்ட்டுடன் வந்தாலே வாக்களிக்கலாம்!

வெளிநாடுகளில் இருந்து திரும்பி வந்தவர்கள், வாக்காளிக்க வரும்போது தேசிய அடையாள அட்டைக்கு கூடுதலாக பாஸ்போர்ட்டையும் கொண்டு வருமாறு தேர்தல் ஆணைக்குழுஅறிவித்துள்ளது.

வாக்கு மோசடிகளைத் தடுக்கும் நடவடிக்கையாக, அவர்கள் வாக்களிப்பு நிலையங்களில் தமது அடையாளத்தை உறுதிசெய்ய இந்த நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறையை பின்பற்றாத எந்தவொரு நபருக்கும், வாக்குச்சீட்டு வழங்கப்படாது. சந்தேகத்திற்கிடமாக வாக்களிக்க முயன்ற எந்த நபரும் பொலிசாரிடம் ஒப்படைக்கப்படுவார்கள்.

வெளிநாடுகளுக்குச் சென்ற நபர்களின் விவரங்கள் வாக்களிப்பு நிலையங்களில் உள்ள தேர்தல் பதிவேட்டில் கிராம சேவகர்களால் பெறப்பட்டு குறிக்கப்பட்டுள்ளன என தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here