விமான நிலையத்தில் சிக்கிய யாழ் இளைஞன்!

போலியாக தயாரித்த ஆவணங்களை ஒப்படைத்து, வர்த்தக கப்பலொன்றில் சேவையாற்றுபவரைப் போன்று, ஐரோப்பியாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர் இன்று (28) அதிகாலை கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம்- கோப்பாய் பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே விமான நிலைய குடிவரவு- குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை 3.15 மணியளவில் டோஹா நோக்கி புறப்படவிருந்த விமானத்தில் பயணிக்க வந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here