அமெரிக்கத் தூதரக அதிகாரிகளிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்த அதிர்ச்சி தகவல்!

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் குழுவினர் இன்று (28) யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சி தலைவர் த.சித்தார்த்தனை சந்தித்து பேசினர்.

அமெரிக்க தூதரகத்தின் அரசியல் விவகாரங்களிற்கு பொறுப்பான அடம் ஸ்மித் தலைமையிலான குழுவினர் இந்த சந்திப்பில் ஈடுபட்டனர்.

தற்போதைய அரசியல் நிலவரம், தேர்தல் நிலமைகள் குறித்து அமெரிக்கக் குழுவினர் கேட்டறிந்து கொண்டனர்.

தபால்மூல வாக்களிப்பு பெருமளவில் அமைதியாக நடைபெற்றாலும், யாழ்ப்பாணத்தில் ஒரு சில அதிகாரிகள் அரச தரப்பு வேட்பாளர்களிற்கு வாக்களிக்குமாறு தமக்கு கீழ் பணிபுரிந்தவர்களிற்கு அழுத்தம் கொடுத்ததாகவும், தேர்தல் விதிமீறலில் ஈடுபட்ட அரச தரப்பு வேட்பாளர்களை கண்டும் காணாமலம் விடும்படி அந்த அதிகாரிகள் அழுத்தம் கொடுத்ததாகவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here