அஸ்கிரிய பீடத்தில் ஆசி பெற்ற இ.தொ.கா பிரமுகர்கள்!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வேட்பாளர்கள் சிலர் இன்று அஸ்கிரிய பீடத்தின் சங்கைக்குறிய மகாநாயக்க ஹிமிவான்ச தேரரை சந்தித்து ஆசி பெற்றனர்.

இன்று (28) இந்த சந்திப்பு நடந்தது.

கட்சியின் பொதுச்செயலாளரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற வேட்பாளருமான ஜீவன் குமாரவேல் தொண்டமான் , இ.தொ.கா வின் நிதிச்செயலாளரும் அதன் வேட்பாளருமான மருதபாண்டி ரமேஸ்வரன் மற்றும் இ.தொ.காவின் கண்டி மாவட்ட வேட்பாளர் பாரத் அருள்சாமி ஆகியோர் சந்தித்து ஆசி பெற்றனர்.

-தலவாக்கலை  பி.கேதீஸ்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here