ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது: இங்கிலாந்தின் இரும்புப்பிடியில் இந்தியா!

இங்கிலாந்திற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் தோவ்வியை எதிர்நோக்கியுள்ளது இந்தியா. இங்கிலாந்தின் வலுவான பந்துவீச்சு படையணியை எதிர்கொள்ள முடியாமல், இந்திய துடுப்பாட்டக்காரர்கள் வரிசையாக சரணடைய, போட்டி முழுமையாக இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. அதீத காலநிலை மாற்றங்கள் நிகழாத பட்சத்தில் இந்தியாவின் தோல்வி தவிர்க்க முடியாதது போன்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

தற்போது இரண்டாவது இன்னிங்சை ஆடி வரும் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 107 ஓட்டங்களை பெற்றுள்ளது. இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸ் ஓட்டத்தை விட 182 ஓட்டங்கள் பின்னிலையில் இந்தியா உள்ளது.

இன்று காலை ஆட்டம் தொடங்கியதும் ஸ்ருவர்ட் பிரோட் 4 விக்கெட்டுக்களையும், அண்டர்சன் 2 விக்கெட்டையும் வீழ்த்தி இந்தியாவின் முதுகெலும்பை முறித்தனர். தற்போது அஸ்வின் 18, பாண்டியா 20 என களத்தில் உள்ளனர்.

முன்னதாக 7 விக்கெட் இழப்பிற்கு 396 ஓட்டங்களுடன் இங்கிலாந்து தனது ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.

இந்தியா முதல் இன்னிங்ஸ் 107 ஓட்டங்கள்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here